மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கைது

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகதிற்கு மத்திய, மாநில அரசுகள் துரோகம் இழைத்து விட்டதாக கூறி சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.



மருத்துவ கல்வி சேர்கையில் மத்திய அரசின் நீட் நுழைவு தேர்வுவிலிருந்து விலக்கு அளிக்க கோரி பல்வேறு கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தியது. நீட் தேர்வுக்கு விலக்கு அளித்து அவசர சட்டம் கொண்டு வர தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது எனக் கூறிய மத்திய அரசு அவசர சட்டதிற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என வழக்கு விசாரணைக்கு வந்த போது தெரிவித்தது.

இது தமிழக கிராமப்புற மாணவர்கள் மற்றும் மாநில பாடத்திட்டத்தின் கீழ் கல்வி பயின்ற மாணவர்களுக்கு மிக பெரும் துரோகத்தை இழைத்து விட்டதாக கூறியும், நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு சரியான முறையில் மத்திய அரசுக்கு அழுத்தம் தரவில்லை எனக் கூறி எஸ்.டி.பி.ஐ கட்சியனர் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு இருந்து ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற எஸ்.டி.பி.ஐ கட்சியினர் 23 பேரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...