டி.டி.வி.தினகரன் பயத்தால் அதிமுகவினரை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்குகிறார்- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி



ஈரோட்டில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கோவை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:-

"மாவட்ட செயலாளர் பதவிக்கு முறையாக வந்தவர்கள் நாங்கள். டி.டி.வி.தினகரனுக்கு வந்துள்ள பயத்தால் அமைச்சர்களையும், அதிமுக-வில் பொறுப்பில் உள்ளவர்களையும் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கி வருகிறார். 

தேர்தல் கமிஷன் அறிவிப்பிக்கு பிறகு தான் கட்சி அதிகாரம் யாருக்கு உள்ளது என்று தெரியவரும். தற்போது நடைபெற்ற கூட்டத்தில் சசிகலா குறித்து எதுவும் பேசவில்லை. பொதுவான விஷயங்கள் குறித்துதான் பேசப்பட்டது. 

இரட்டை இலையை மீட்கும் நடவடிக்கையில் மூத்த அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர். சின்னம் விரைவில் மீட்கப்படும். எம்எல்ஏக்கள் இடையே பேரம் எதுவும் நடக்கவில்லை. கருணாஸ், தனியரசு, தமீமுன் அன்சாரி ஆகியோர் தனி அமைப்பு நடத்துவதால் அவர்களுடைய நிலைப்பாட்டை அவர்கள் தான் அறிவிக்க வேண்டும். தற்போது தேர்தல் நடந்தால் வாக்களிக்க மக்களும் தயாராக இல்லை, எம்.எல்.ஏ-க்களும் தயாராக இல்லை. அடிக்கடி வாக்களிக்க யாரும் விரும்பமாட்டார்கள்" என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...