தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று (சனிக்கிழமை) இரவு கோவைக்கு வருகைதந்தார். அவரை நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், கோவை மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி ஆகியோர் மலர் கொத்து வழங்கி வரவேற்றனர்.
