பொது தேர்தல் நடந்தால் தான் மக்கள் விரும்பும் ஆட்சி அமையும் -மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன்

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேரின் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிக்கைக்கு பின்னரும் தமிழக கவர்னர் தொடர்ந்து அமைதி காப்பது ஏன் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு வீணாவதற்கு காரணமான இருக்கும்  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலகு வேண்டும் என வலியுறுத்தினார்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிக்கை வைத்த பின்னரும் ஆளுனர் தொடர்ந்து அமைதி காப்பது ஏன் என கேள்வி எழுப்பியவர், தமிழக அரசியல் சூழல் தெரிந்தும் ஆளுனர் மும்பை சென்றுள்ளதில் உள்நோக்கம் இருப்பதாக கருவதாகவும், இது பல விதமான சந்தேகங்களை எழுப்புகிறது என தெரிவித்தார்.

பொது தேர்தல் நடக்க வேண்டும், அப்போது தான் மக்கள் விரும்பும் ஆட்சி அமையும் என சுட்டிக் காட்டினார். சபாநாயகர் தனபால் முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கை, குழப்பத்தில் ஆதாயம் தேடும் சூழல் என குற்றம்சாட்டிய அவர், திருமாவளவன் அதை வரவேற்பது சரியல்ல என தெரிவித்தார். 

சாதியின் அடிப்படையில் முதல்வர் நியமனம் செய்வது தகுந்ததள்ள எனவும், இரு அணிகள் இணைப்பு என்பது நாடகமே என புகார் கூறினார். சிறையில் இருந்து சசிகலா வெளியே சென்றதாக வெளிவரும் வீடியோ பொய்யாக இருக்க வாய்ப்பு இல்லை எனவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...