அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேரின் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிக்கைக்கு பின்னரும் தமிழக கவர்னர் தொடர்ந்து அமைதி காப்பது ஏன் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு வீணாவதற்கு காரணமான இருக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலகு வேண்டும் என வலியுறுத்தினார்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிக்கை வைத்த பின்னரும் ஆளுனர் தொடர்ந்து அமைதி காப்பது ஏன் என கேள்வி எழுப்பியவர், தமிழக அரசியல் சூழல் தெரிந்தும் ஆளுனர் மும்பை சென்றுள்ளதில் உள்நோக்கம் இருப்பதாக கருவதாகவும், இது பல விதமான சந்தேகங்களை எழுப்புகிறது என தெரிவித்தார்.
பொது தேர்தல் நடக்க வேண்டும், அப்போது தான் மக்கள் விரும்பும் ஆட்சி அமையும் என சுட்டிக் காட்டினார். சபாநாயகர் தனபால் முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கை, குழப்பத்தில் ஆதாயம் தேடும் சூழல் என குற்றம்சாட்டிய அவர், திருமாவளவன் அதை வரவேற்பது சரியல்ல என தெரிவித்தார்.
சாதியின் அடிப்படையில் முதல்வர் நியமனம் செய்வது தகுந்ததள்ள எனவும், இரு அணிகள் இணைப்பு என்பது நாடகமே என புகார் கூறினார். சிறையில் இருந்து சசிகலா வெளியே சென்றதாக வெளிவரும் வீடியோ பொய்யாக இருக்க வாய்ப்பு இல்லை எனவும் தெரிவித்தார்.