ஸ்மார்ட் சிட்டி திட்ட தலைமை நிர்வாக அதிகாரி நியமனத்தை ரத்து செய்யக்கோரி ஆம் ஆத்மி கட்சியினர் மனு

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சுகன்யா-வினை தேர்வு செய்யப்பட்டத்தில் உள்ள முறைகேடுகளை கண்டறிந்து அவரை பணயில் இருந்து ரத்து செய்ய வேண்டும் என கோவை மாவட்ட ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டத்தின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சுகன்யா-வினை தேர்வு செய்யப்பட்டதில் உள்ள முறைகேடுகளை கண்டறிந்து அந்த நியமனத்தை அரசின் அனைத்து சட்ட விதிகளின்படி நியமிக்க வேண்டும். மேலும் அவர்களின் நியமனத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

ஸ்மார்ட் சிட்டி என்பது கோவை மாநகராட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் மற்றும் கோவை மாநகராட்சிவாழ் மக்கள் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் சார்ந்த விஷயம். இதில் நல்ல அனுபவம் வாய்ந்த பொறியாளர்களை நியமித்து பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் இந்த திட்டத்தை சிறப்பாக எந்தவித லஞ்சம், ஊழலுக்கு இடம் தராமல் சிறப்பாக மக்களுக்கு பயன்பெற, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஆம் ஆத்மி கட்சியினர் சார்பில் ஆட்சியரிடம் வழங்கப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...