மருத்துவத்துறையில் புதிய சாதனை படைக்கும் கங்கா மருத்துவமனையின் "ஏர் ஆம்புலன்ஸ்"

பொதுவாக மருத்துவத் துறையில் உடல் மாற்று அறுவை சிகிச்சை என்பது மிகப்பெரிய சாதனையாகும். இதில் பெரிதும் இடர்பாடாக இருப்பது ஒரு பகுதியில் இருந்து உடல் உறுப்பை வேறு பகுதிக்கு கொண்டு சென்று நோயாளிக்கு பொருத்துவதே. உடலில் இருந்து பிரிக்கப்பட்ட உடல் பாகங்கள் குறிப்பிட்ட நேரத்தில் தேவைப்படும் நோயாளியின் உடலில் பொருத்தப்பட வேண்டும். இதில் நேரத்தினை சரியான முறையில் கடைபிடிப்பது என்பது சிரமமாகவே மருத்துவத் துறையில் இருந்து வருகிறது. அவ்வாறான தருணங்களில் தற்போது கங்கா மருத்துவமனையினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள "ஏர் ஆம்புலன்ஸ்" சேவை பெருத்த வரவேற்பினை பெற்றுள்ளது.

அவ்வாறான ஒரு சம்பவமே சமீபத்தில நடைபெற்றுள்ளது. சென்னை குளோபல் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருதய நோயால் தனது இறுதிகட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த 28 வயது இளைஞருக்கு வேலூரில் மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயம் குறிப்பிட்ட நேரத்தில் கங்கா மருத்துவமனையின் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டு பொருத்தப்பட்டு அந்த இளைஞருக்கு மறுபிறவி அளிக்கப்பட்டுள்ளது.

வேலூரில் இருந்து சென்னைக்கு குறிப்பிட்ட நேரத்தில் இதயம் எடுத்தச் செல்லப்பட்டு செய்யப்பட்ட இந்த அறுவை சிகிச்சையில் கங்கா ஏர் ஆம்புலன்ஸ், விஐடீ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சிஎம்சி வேலூர், சென்னை சன்மார் குழு, குளோபல் மருத்துவமனை, வேலூர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்கள், சென்னை காவல்துறை ஆணையர், வேலூர் காவல் துறை, காரப்பாக்கம் காவல்துறை குழு மற்றும் சென்னை வானூர்தி போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்ட பலர் தங்களது சீறிய பணியினை வெளிப்படுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...