அதிமுக இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு- சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம்

அதிமுக இரு அணிகளும் இணைய வேண்டுமென்பதை ஒட்டுமொத்த அதிமுகவினரும் எதிர்நோக்கி காத்திருப்பதாக கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் தெரிவித்துள்ளார்.

கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக அம்மா அணியைச் சேர்ந்தவருமான எட்டிமடை சண்முகம், சுந்தராபுரம் பகுதியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்படுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து இருப்பது மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இந்த அறிவிப்பு 8 மாத மனக்குமறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். அவரது மரணம் தொடர்பான சந்தேகங்களுக்கு தீர்வாக அமையும்.

ஜெயலலிதா வாழ்ந்த இடமான வேதா இல்லம் என்பது அதிமுக-வினருக்கு கோவில் போன்றது. இதனை தரிசிக்க அனைவருக்கும் அனுமதி வழங்கி இருப்பது மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி அடைய செய்துள்ளது. மேலும், ஜெயலலிதாவின் இல்லம் மற்றும் சொத்துக்களை உரிமை கொண்டாட தனிமனிதர்களுக்கு உரிமை கிடையாது. 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறந்த முறையில் ஆட்சி நடத்தி வருகிறார். அதிமுக இரு அணிகளும் இணைய வேண்டுமென்பதை ஒட்டுமொத்த அதிமுக-வினரும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இவ்வாறு கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக அம்மா அணியைச் சேர்ந்தவருமான எட்டிமடை சண்முகம் தெரிவித்தார்.

Newsletter

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...