நடிகர் திலகம் சிவாஜி சிலையை மீண்டும் கடற்கரை சாலையிலேயே நிறுவ வலியுறுத்தி கோவையில் உண்ணாவிரதம்


சென்னை கடற்கரை சாலையில் இருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உருவ சிலையை போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளதாகக் கூறி தமிழக அரசு நள்ளிரவில் அகற்றியது. இது சிவாஜி ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

இதனைத்தொடர்ந்து, சிவாஜி சிலையை மீண்டும் கடற்கரை காமராஜர் சாலையிலேயே, காந்தி சிலைக்கும் காமராஜர் சிலைக்கும் நடுவே அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவரது ரசிகர்கள் முன்வைத்தனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி, அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் கோவை மாநகரில், அனைத்து    சிவாஜி கணேசன் ரசிகர் அமைப்புகள் சார்பில் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவின் தலைவரும், நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை தலைவருமான சந்திரசேகரன் தலைமையில் ஒருநாள் அடையாள கோரிக்கை உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.

நடிகர் திலகம் சிவாஜி, நடிப்பால் மக்களை கவர்ந்தவர்.  கலைத்துறை மூலம் தமிழக மக்களின் மனங்களில் நீங்காத இடத்தை பெற்றவர் என்பதால் அவரை சினிமா துறையை சார்ந்தவர் என்று மட்டும் பாராமல் அவருடைய சிலையை கடற்கரை சாலையில் அமைக்கபடவேண்டும் என்று கோரிக்கை விடுத்தவர்கள், மணிமண்டபத்தில் வேண்டுமானால் புது சிலை வைத்துக் கொள்ளட்டும். ஆனால் அகற்றபட்ட சிலையை அது இருந்த இடத்திலேயே நிறுவ வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.  

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...