கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகி 26 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், சாதாரண காய்ச்சல்களுக்கு உள்ளாகி 158 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவரது மனைவி மரியஜோஸ்மின் (65) என்பவர் காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரிகளை சோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு பன்றிக்காய்ச்சல் தொற்று இருப்பதை உறுதி செய்தனர்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பன்றிக் காய்ச்சல் தொற்றுக்கு ஆளான பெண்ணுக்கும் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.