ஓடும் கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் ஒருவர் பலி


கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் திலீப் குமார். இவர் குடும்பத்துடன் பெங்களூரில் இருந்து காரில் எர்ணாகுளம் சென்றுகொண்டிருந்தார்.



அவரது கார் இன்று அதிகாலை கோவை மதுக்கரை எல் அண்ட் டி பைபாஸ் சுங்கச்சாவடி அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது காரின் முன் பகுதியில் திடீரென தீப்பிடித்தது.



உடனடியாக திலீப் குமாரின் மனைவி ஆஷா மற்றும் குழந்தைகள், மகன் நித்தூஸ், மகள் குல் காரில் இருந்து இறங்கினர். 

ஆனால், தீலிப்குமார் சீட்பெட் அணிந்திருந்ததால் அவரால் வெளியே வரமுடியவில்லை. இதில் அவர் காரினுள்ளேயே உடல் கருகி பலியானார்.



இது குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மதுக்கரை போலீசார் திலீப் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓடும் காரில் தீப்பிடித்து ஒருவர் பலியான சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...