அறுவை சிகிச்சையில் திறமை அவசியம்- அறுவை சிகிச்சை மருத்துவர்களின் 41-வது மாநாட்டில் அரசு மருத்துவமனை டீன் பேச்சு

தமிழ்நாடு அறுவை சிகிச்சை மருத்துவர்களின் 41-வது மாநாடு முதன் முறையாக கோவை அரசு மருத்துவமனையால் இன்று அரசு மருத்துவக் கல்லூரியில் துவங்கியது.

இதன் முதல் நாள் அமர்வில், தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகள் காணொளிக்காட்சி மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. மேலும், அந்த அறு சிகிச்சையின் போது மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்கள் விளக்கமளித்தனர். முன்னதாக இந்த காணொளிக்காட்சி நிகழ்ச்சி மற்றும் மாநாட்டினை கோவை அரசு மருத்துவமனையின் டீன் அசோகன் துவக்கி வைத்து உரையாற்றினார்.



அப்போது அவர் பேசுகையில், தற்போதுள்ள தொழில்நுட்ப மேன்மையடைந்த காலகட்டத்தில் அறுவை சிகிச்சைகள் குறித்து சமூகவளைதலங்களில் அதிகமாக காணொளிக்காட்சிகள் பகிரப்படுகின்றன. ஆனால், அதுகுறித்தான நம் சந்தேகங்களை நாம் அறிய முடிவதில்லை. இதுபோன்ற கருத்தரங்குகள் மூலமாகவே அறுவை சிகிச்சைகள் குறித்து நாம் அறிந்துகொள்ள முடியும். 



நமது பாரம்பரியத்தின்படி வேதகாலத்தில் சுமார் 3600 ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவம் துவங்கி விட்டது. பிளாஸ்டிக் சர்ஜரி எனப்படும் அறுவை சிகிச்சை 600 ஆண்டுகளுக்கு முன்பே சுஸ்ருதா என்பவரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மருத்துவர்களுக்கு திறமை மிகவும் அவசியம். அது இதுபோன்ற கருத்தரங்குகளில் பங்கேற்பதன் மூலமே அதிகரிக்கும்".

இவ்வாறு கோவை அரசு மருத்துவமனையின் டீன் அசோகன் பேசினார்.

இந்த அறுவை சிகிச்சை மருத்துவர்களின் 41-வது மாநாட்டில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மருத்துவர்கள் பங்கேற்றனர். மேலும், கோவையில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர், மருத்துவர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.



Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...