தீபாவளிப் பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசுக் கடைகளை அமைக்க உரிமம் பெற வேண்டும்- மாவட்ட ஆட்சியர்

தீபாவளிப் பண்டிகையையொட்டி கோவை மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகளை நடத்திட உரிமம் பெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தகவல் தெரிவித்துள்ளார்.

நடப்பு 2017-ஆம் ஆண்டிற்கான தீபாவளிப் பண்டிகை வரும் அக்டோபர் 18 அன்று கொண்டாடப்படவுள்ள நிலையில், கோவை மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் தற்காலிகமாக பட்டாசுக் கடைகள் நடத்திட விருப்பம் உள்ளவர்கள், வெடிபொருள் சட்ட விதிகள், 2008 -இன் கீழ் கோவை மாவட்ட ஆட்சியரிடம் தற்காலிக பட்டாசு உரிமம் பெற்றிட வேண்டும்.

மேற்படி உரிமத்தினைப் பெறுவதற்கென கீழ்கண்ட ஆவணங்களுடன் கூடிய தங்களது விண்ணப்பத்தினை கடந்த ஜூலை 31 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிடைக்கத் தக்க வகையில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. 

இந்நிலையில் தற்போது வரை விண்ணப்பம் செய்யப்படாதவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கும் விதமாக மேற்படி மனுக்களை பெறுவதற்கான வரையறை காலமானது, இறுதியாக  ஆகஸ்ட் 21 அன்று மாலை 5.45 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. மேலும், தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெற மனு செய்வதற்கு இதுவே கடைசி வாய்ப்பாகும்.

எக்காரணத்தை முன்னிட்டும் காலவரையறையானது நீட்டிக்கப்படமாட்டாது. மேற்குறிப்பிட்ட காலக்கெடுவிற்குப் பின்னால் வரப்பெறும் விண்ணப்பங்கள் நிர்வாக காரணங்களினால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...