முறையாக குடிநீர் வழங்காத கோவை மாநகராட்சியைக் கண்டித்து திமுக-வினர் ஆர்ப்பாட்டம்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் மக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர். அவ்வப்போது சாலை மறியல்களிலும் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் இன்று மாலை உழவர் சந்தை அருகே, முறையாக குடிநீர் வழங்காத கோவை மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலிக் குடங்களுடன் கலந்து கொண்டு மாநகராட்சிக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.



தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக, சிங்காநல்லூர், குறிச்சி, பீளமேடு, சரவணம்பட்டி மற்றும் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி போன்ற பகுதிகளில் குடிநீர் முறையாக விநியோகிக்கப்படுவது இல்லை. 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.



கடந்த திமுக ஆட்சியில் பல்வேறு குடிநீர் திட்டங்கள் கொண்டுவரப்பட்டு கோவை மக்களின் தாகம் தீர்க்கப்பட்டது. ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக புதிதாக எந்த ஒரு குடிநீர் திட்டங்களும் கொண்டுவரப்படவில்லை.

20 லட்சம் மக்கள் தொகை கொண்ட கோவையில், மக்களின் எதிர்காலத்தேவைகளை கருத்தில் கொண்டு குடிநீர் திட்டங்கள் கொண்டுவராமலிருக்கிறது ஆளும் அரசு. 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...