வழிதவறிய மீனவர்களைக் கண்டுபிடிக்க மொபைல் ஆப்

கடலில் வழி தவறுகின்ற மீனவர்கள் உள்பட படகுகள், கப்பல்கள் உள்ளிட்ட 64 வகையான பொருட்களை கண்டுபிடிக்க SARAT என்ற பெயரில் மொபைல் ஆப்பை கடல் தகவல் சேவைகளின் இந்திய தேசிய மையம் உருவாக்கியுள்ளது.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோன்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த SARAT மொபைல் ஆப் மூலமாக கடலில் தத்தளிப்பவர்கள், காணாமல் போனவர்கள் ஆகியோர் உள்பட பல்வேறு வகையான 64 பொருட்களை மிகவும் எளிதாக கண்டுபிடிக்க முடியும் வகையில் சூப்பர் கணினிகளின் உதவியை கொண்டு ஹைதராபாத் கடல் சேவை மையத்துக்கான இந்திய தேசிய மையம் உருவாக்கியுள்ளது.

கடலில் இருந்து 10 கி.மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் மீனவர்கள், செல்போனில் நெட்வொர்க் கிடைத்தால், SARAT-ஐப் பயன்படுத்த முடியும். இது குறிப்பாக மீனவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தேடுதல் பணியில் ஈடுபடும்போது, காணாமல் போன பொருள், மனிதர்கள் கடைசியாக எங்கு இருந்தார்கள் என்ற விவரத்தை ஜிபிஎஸ் உதவியுடன் குறிப்பிடவேண்டும் என்றும், அப்படி குறிப்பிட்டால் சூப்பர் கணினிகள் செயற்கைக்கோள் துணையுடன் விரைவில் கண்டுபிடிக்கமுடியும் என்றும் அவர் கூறியுள்ளார். SARAT ஆப்பைப் பயன்படுத்துவது குறித்து விரைவில் கடற்படை பாதுபாப்பு படையினர் மீனவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...