நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கக்கோரி, மாணவர் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.
மாணவர் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரியும், மருத்துவ படிப்பிற்கு நிரந்தரமாக நுழைவு தேர்வு நடத்தக்கூடாது எனவும் வலியுறுத்தினர்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
தமிழக அரசின் தீர்மானத்தை மத்திய அரசு கிடப்பில் போட்டு இருப்பதாகவும், நீட் விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு மிகவும் மோசமாக இருப்பதாகவும் குற்றம்சாட்டிய அவர்கள், நீட் தேர்வில் இருந்து நிரந்தரமாக விலக்கு பெற வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.