“இசைஞர் - 2017” இசைக்கருவிகள் இசைக்கும் போட்டி நாளை முதல் துவக்கம்!

இசைக் கருவிகளை இசைக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக “இசைஞர்-2017” எனும் போட்டிக்கு கோவை நன்னெறிக் கழகம் சார்பில் சரோஜினி நடராஜ் டிரஸ்ட் மற்றும் தி இந்து நாளிதழ் ஆகியன இணைந்து நடத்துகின்றன. கிக்கானி பள்ளி வளாகத்தில் உள்ள சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியத்தில் நடைபெற உள்ளன. இந்நிகழ்ச்சிக்கு நித்யஸ்ரீ மகாதேவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.

இப்போட்டியில் கலந்துகொள்ள கோவை, திருப்பூர் மற்றும் நிலகீரி மாவட்டங்களைச் சேர்ந்த 440 பேர் விண்ணப்பித்திருந்தார்கள். போட்டியாளர்களுக்கான தகுதிச் சுற்றுகள் இன்று (ஜூலை 29 - சனிக்கிழமை) காலை 9 மணி முதல் ஆரம்பமாகின்றன.

இறுதிச் சுற்று நாளை (ஜூலை 30 - ஞாயிற்றுகிழமை) மாலை 5:00 மணிக்கு நடைபெற இருக்கிறது. இப்போட்டிகளின் நடுவர்களாக அவிநாசிலிங்கம் பல்கலைக் கழகத்தின் இசைத்துறைத் தலைவர் ஜனக மாயாதேவி மற்றும் அவரது சக இசை ஆசிரியர்கள் செயல்பட இருக்கிறார்கள்.

பரிசளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினர்களாக சென்னை சில்க்ஸ் இயக்குனர் கே.விநாயகம் மற்றும் பிரபல கர்நாடக சங்கீத பாடகி கலைமாமணி நித்யஸ்ரீ மகாதேவன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். பரிசளிப்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து நித்யஸ்ரீ மகாதேவன் அவர்களின் இசை நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியை சென்னை சில்க்ஸ், ரேடியோ சிட்டி, சிம்ப்ளிசிட்டி, காட்ஸ்வில்லா ரிசார்ட், உடுமலை.காம், ஃபன் சிட்டி ஆகியவை இணைந்து நடத்துகின்றன. அனுமதி இலவசம். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...