தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் டெங்கு விழிப்புணர்வு கூட்டம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் நல இயக்கதில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்காக டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.



டெங்கு விழிப்புணர்வு கூட்டத்தில் நகர நல மருத்துவ அலுவலர் கே. சந்தோஷ்குமார் டெங்கு காய்ச்சல் பற்றியும், கொசுக்களால் வியாதி பரவுதலைப்பற்றியும் விழிப்புணர்வு உரையாற்றினார்.

கோவை மாநகர சுகாதார அலுவலர் கே.வி. திருமால் மற்றும் சுகாதார ஆய்வாளர் கே.ராதாகிருஷ்ணன் டெங்கு உற்பத்தியாகும் இடங்கள் பற்றியும், கொசு உற்பத்தி மையங்களை தடுப்பது பற்றியும் செயல்முறை காட்சிகளை நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு விளக்கி கூறினார்கள்.

மேலும், பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பல்கலைக்கழக குடியிருப்புப் பகுதிகளில் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பொது சுகாதாரத்தைப் பற்றிய அறிவுரைகளை வழங்கி டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்கள்.  

டெங்கு விழிப்புணர்வு கூட்டத்தினை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் மற்றும் சுகாதார அலுவலர் மருதாசலம் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...