நீலகிரியில் எம்ஜிஅர் நூற்றாண்டு விழா குறித்து ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

நீலகிரி மாவட்டம் உதகையில் செப்டம்பர் மாதம் 11ம் தேதியன்று பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடுவது தொடர்பான கூட்டம் கடந்த ஜூலை 17ம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளின் விவரங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.



மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடும்ப அட்டை, வீட்டுமனைப்பட்டா, தொழில் மற்றும் கல்விக் கடன் உதவி, முதியோர் உதவித்தொகை, சாலை, குடிநீர், கழிப்பிடம் மற்றும் மின்சார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 104 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.



பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யாவிடம் அளித்த இம்மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதோடு மட்டுமல்லாமல் கடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தீர்வு காணாமல் நிலுவையிலுள்ள மனுக்களின் மீது விரைவான நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். 



இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தாட்கோ மூலம் குன்னூர் டைகர்ஹில் பகுதியை சேர்ந்த வி.கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு ரூ.2,25,000 மானியத்துடன் ரூ.8,75,060 மதிப்பிலான டூரிஸ்ட் வாகனத்தையும், திருநங்கைகளுக்கு சுயதொழில் துவங்க 1 பயனாளிக்கு ரூ.20,000 வீதம் 6 பயனாளிகளுக்கு ரூ.1,20,000 நிதியுதவியும் மற்றும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு 4 கிராம் தங்கமும், ரூ.50,000 நிதியுதவியும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.



இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன், உதவி ஆணையர் (கலால்) முருகன், தனித்துணை ஆட்சியர் மனுக்கள் கார்த்திகேயன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கலைமன்னன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...