கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி ராஷ்ட்ரீய ஹிந்து பரிஷத் ஆட்சியரிடம் மனு

கோவை, சிஐடி காலனி சுந்தரம் வீதியில் கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடையினை அகற்றக் கோரி ராஷ்ட்ரீய ஹிந்து பரிஷத் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து, ராஷ்ட்ரீய ஹிந்து பரிஷத்தின் கோவை மாவட்ட துணைத் தலைவர் ஆட்சியரிடம் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது:-



சென்னை நீதிமன்ற உத்தரவின்படி வழிபாட்டு தளங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் முதியோர் இல்லங்கள் உள்ள இடங்களில் மதுபானக் கடைகள் அமைக்கக் கூடாது என்ற உத்தரவு அமலில் உள்ள நிலையில் கோவை தாமஸ் வீதியில் மதுக்கடை (எண் 1711) கோவிலுக்கு அருகாமையில் செயல்பட்டு வருகிறது. 

கோவை டி.கே.மார்க்கெட் பகுதியில் ஏற்கனவே ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வரும் நிலையில் தற்போது இதன் அருகிலேயே புதிய மதுக்கடை திறந்திருப்பது அப்பகுதி பெண்கள் மத்தியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.



எனவே, இப்பகுதி குடியிருப்புவாசிகளின் நலன்கருதியும், பெண்களின் பாதுகாப்பு கருதியும் உடனடியாக அந்த டாஸ்மாக் கடைகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் விடுத்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...