ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கோவை வ.ஊ.சி மைதானத்தில் போராட்டம்: 14 இளைஞர்கள் கைது

கோவை வ.உ.சி மைதானத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவை வ.உ.சி மைதானத்தில் இன்று மாலை கல்லூரி மாணவர்களும் இளைஞர்களும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நெடுவாசல், கதிராமங்கலம் பகுதிகளில் விவசாயிகள் மேற்கொள்ளும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் மாணவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

போராட்டம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் வ.உ.சி மைதானத்திற்கு விரைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை உடனடியாக கலைந்து செல்லும்படியும் இல்லையெனில் கைது செய்வதாக எச்சரித்தனர்.

காவல் துறையினரின் எச்சரிக்கையையும் மீறி இளைஞர்கள் போராட்டத்தை தொடர்ந்ததால் அவர்களை காவல் துறையினர் கைது செய்ய முயன்றனர்.

அப்போது அப்போது இளைஞர்கள் எழுந்தவுடன் அவர்களை  காவல்துறையினர்  விரட்டிச்சென்று கலைத்தனர். கலையாமல் நின்று கொண்டு இருந்த பெண்கள் உட்பட  14 பேரை காவல் துறையினர் கைது செய்து ரேஸ்கோர்ஸ் காவல்நிலையம் அழைத்து சென்றனர். இதனையடுத்து வ.உ.சி மைதானத்தில் பாதுகாப்பிற்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். 

ஜல்லிக்கட்டுக்காக போராடியதை போல இளைஞர்கள் நெடுவாசல், கதிராமங்கலம் விவகாரங்களுக்காக ஓன்று சேர்ந்து விடக்கூடாது என்பதால் முன் கூட்டியே காவல் துறையினர் போராட்டங்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...