திருப்பூரில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா வரும் ஜூலை 22ம் தேதியன்று (நாளை) சிறப்பாக நடைபெறவுள்ளது. இவ்விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். 

இவ்விழாவினையொட்டி திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஒரு வார காலமாக பள்ளி மாணவ மாணவியர்களிடையே பல்வேறு கட்டுரை, கவிதை, பேச்சு மற்றும் விளையாட்டு போட்டிகளும் ஊராட்சிப் பகுதிகளில் எம்.ஜி.ஆர் பற்றிய குறும்படமும், அவர் நடித்த திரைப்பபடங்களும் கிராமங்களில் மின்னணுத் திரை மூலம் திரையிடப்பட்டு வருகின்றன.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நாளை நடைபெறும் இந்த நூற்றாண்டு விழாவிற்கு தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தலைமை வகிக்கவுள்ளார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் முன்னிலை வகிக்கவுள்ளார். மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை சிறப்புரை ஆற்றவுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்தினை திறந்து வைத்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழாப் பேருரையாற்றுவார்.

மேலும், விழாவில் அமைச்சர்கள், சட்டப்பேரவை துணைத் தலைவர், அரசு தலைமை கொறடா, தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி, புதுடெல்லி மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்குவார்கள். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திநாதன் வரவேற்புரையாற்ற உள்ளார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி நன்றியுரையாற்றுவார்.

இதனைத்தொடர்ந்து, இந்த நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பிற்பகல் 3 மணியளவில், விழா மேடையில் எம்.ஜி.ஆர் புகழ்பாடும் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...