ஆம்புலன்சுகளுக்கு வழி விடும் சிக்னல்: போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் இயந்திரம்

கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் மிகுதியாக உள்ள சாலைகளிலும், சிக்னல்களிலும் ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் முன்னேறி செல்ல வழியின்றி விழி பிதுங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனை தடுக்க தற்போது போக்குவரத்து சிக்னல்களில் தானியங்கி இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. 

கோவை மாநகரில் உள்ள 55 சிக்னல்களில் 15 சிக்னல்களில் இந்த இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்பு, ஆம்புலன்ஸ் அல்லது தீயணைப்பு வாகனங்கள் வரும்போது, அவை தொடர்ந்து முன்னே செல்ல சிக்னல்கள் இடையூறாக இருந்தன. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த இயந்திரம் போக்குவரத்து போலீசார் அமரும் குடையின் கீழ் பொருத்தப்படுகிறது. ஆம்புலன்ஸ் வரும் வழியினை அறியும் போலீசார் உடனடியாக குறிப்பிட்ட வழிக்கான இடத்தை அழுத்தி அந்த சிக்னலில் பச்சை விளக்கு எரிய செய்யலாம். இதனால், அவசர ஊர்திகள் விரைவாக செல்ல வழி வகை உருவாகியுள்ளது.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...