சிம்ப்ளிசிட்டி செய்தி எதிரொலி: பொது இடத்தில் மது அருந்திய நான்கு பேர் மீது வழக்கு

நெடுஞ்சாலையில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, கோவையின் முக்கிய இடங்களில் இருந்த பல்வேறு டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டன. 



இதனால், ஊருக்கு நடுவே இருக்கும் டாஸ்மாக் பார்களுக்கு படையெடுத்த மது பிரியர்கள் பொது இடங்களிலேயே வைத்து மதுவை அருந்துவதும் பின்னர் காலி பாட்டில்களை சாலைகளில் எரிவதையும் வழக்கமாக கொண்டிருந்தனர். 

ஜி.வி ரெசிடென்சி சந்திப்பில் இருக்கும் டாஸ்மாக் பார் முன்பு உள்ள காலி மைதானத்திலும், அதன் சுற்று வட்டாரப்பகுதிகளிலும் பலர் கூட்டாக அமர்ந்து மது அருந்துவதோடு, கண்ணாடி பாட்டில்களை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது வீசிச்செல்வதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியதையடுத்து சிம்ப்ளிசிட்டியில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.



இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை சிங்காநல்லூர் போலீசார் அப்பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது ஜி.வி.ரெசிடென்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமர்ந்து மது அருந்தி வந்தவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது, மசக்காளி பாளையம் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் (36), சிவக்குமார் (37), சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த வரதராஜன் (40) மற்றும் சுரேஷ் (35) ஆகிய நான்கு பேர் மீது பொது இடத்தில் மது அருந்தியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...