பராமரிப்பு பணி காரணமாக அரக்கோணம் - காட்பாடி ரயில் சேவையில் மாற்றம்

அரக்கோணம் - காட்பாடி வரையிலான இரயில்வேப் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு ஜூலை 6ம் தேதி முதல் 11ம் தேதி வரை ரயில்வே சேவையில் மாற்றம் செய்து சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

2017 ஜூலை 6 (வியாழன்):

ரயில் எண் 12521 பரணி - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் தலங்கை ரயில் நிலையத்திற்கு 01.25 மணிக்கு சென்றடையவதற்கு மாறாக 04.00 மணிக்கு வரும். ஜோலார்பேட்டைக்கு 155 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும்.

ரயில் எண் 13351 தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் 03.45 முதல் 04.00 மணி வரை சோலிங்கனூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். ஜோலார்பேட்டைக்கு 15 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும்.

ரயில் எண் 22650 ஈரோடு- சென்னை ஏற்காடு எக்ஸ்பிரஸ், ரயில் எண் 22652 பழனி - சென்னை எக்ஸ்பிரஸ், ரயில் எண் 12658 கேஎஸ்ஆர் பெங்களூர் - சென்னை மெயில், ரயில் எண் 12672 மேட்டுப்பாளையம் - சென்னை நீலகிரி எக்ஸ்பிரஸ், ரயில் எண் 22681 மைசூர் - சென்னை வீக்லி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், ரயில் எண் 12602 மங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ், ரயில் எண் 22640 ஆலப்புழா - சென்னை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் அனைத்தும் 20 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.

2017 ஜூலை 8 (சனிக்கிழமை):

ரயில் எண் 13351 தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் தலங்கை ரயில் நிலையத்தில் 03.45 மணி முதல் 05.30 மணி வரை நின்று பின் ஜோலார்பேட்டைக்கு 105 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும். 

2017 ஜூலை 9 (ஞாயிறு):

ரயில் எண் 13351 தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் சோலிங்கனூர் ரயில் நிலையத்தில் 03.45 மணி முதல் 05.30 மணி வரை நின்று பின் ஜோலார்பேட்டைக்கு 105 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும். 

2017 ஜூலை 10 (திங்கட்கிழமை):

ரயில் எண் 13351 தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் சோலிங்கனூர் ரயில் நிலையத்தில் 03.45 மணி முதல் 04.00 மணி வரை நின்று ஜோலார்பேட்டையை 15 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும்.

ரயில் எண் 22650 ஈரோடு- சென்னை ஏற்காடு எக்ஸ்பிரஸ், ரயில் எண் 22652 பழனி - சென்னை எக்ஸ்பிரஸ், ரயில் எண் 12658 கேஎஸ்ஆர் பெங்களூர் - சென்னை மெயில், ரயில் எண் 12672 மேட்டுப்பாளையம் - சென்னை நீலகிரி எக்ஸ்பிரஸ், ரயில் எண் 12602 மங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ், ரயில் எண் 22640 ஆலப்புழா - சென்னை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் அனைத்தும் 20 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.

2017 ஜூலை 11 (செவ்வாய்):

ரயில் எண் 12511 கோரக்பூர் - திருவனந்தபுரம் ராப்திசாகர் எக்ஸ்பிரஸ் தலங்கை ரயில் நிலையத்தில் 01.25 மணி முதல் 04.00 மணி வரை நின்று பின் ஜோலார்பேட்டைக்கு 155 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும்.

ரயில் எண் 13351 தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் சோலிங்கநல்லூர் ரயில் நிலையத்தில் 03.45 மணி முதல் 04.00 மணி வரை நின்று ஜோலார்பேட்டைக்கு 20 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும்.

ரயில் எண் 22650 ஈரோடு- சென்னை ஏற்காடு எக்ஸ்பிரஸ், ரயில் எண் 22652 பழனி - சென்னை எக்ஸ்பிரஸ், ரயில் எண் 12658 கேஎஸ்ஆர் பெங்களூர் - சென்னை மெயில், ரயில் எண் 12672 மேட்டுப்பாளையம் - சென்னை நீலகிரி எக்ஸ்பிரஸ், ரயில் எண் 12602 மங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ், ரயில் எண் 22640 ஆலப்புழா - சென்னை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் அனைத்தும் 20 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...