பொறியியல் கல்லூரி மாணவர்கள் அறையில் வெடிபொருட்கள்- காவல்துறையினர் விசாரணை



கோவையில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கி இருந்த அறையில் வெடி பொருட்கள் இருந்ததால், அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் தொடர்ந்து மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை அடுத்துள்ள கோவைபுதூரில் ஏராளமான மாணவர்கள் கல்லூரி அருகே வீடு வாடகைக்கு எடுத்து தங்கி படித்து வருகின்றனர். இதில், அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் பொறியியல் மாணவர்களும் இவ்வாறான வீடுகளில் தங்கியிருந்த நிலையில், அவர்களது வீட்டிற்கு புதிது புதிதாக சில நபர்கள் வந்து சென்றுள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் அப்பகுதீ காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து மாணவர்கள் தங்கியிருந்த பகுதிக்கு விசாரணைக்காக காவல்துறையினர் வந்த நிலையில்,காவல்துறையினரைக் கண்ட  நபர்கள், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதனை தொடர்ந்து மாணவர்கள் தங்கியிருந்த அறையை போலீசார் சோதனையிட்ட போது, பெரிய அளவிலான பட்டாசுகள் ஒரு பையில் நிறைய இருப்பதும், அவற்றின் மேலே வெடி பொருட்கள் போல கயிற்றில் சுற்றி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை பறிமுதல் செய்த குனியமுத்தூர் காவல்துறையினர் அறையில் தங்கி இருந்த 3 பொறியியல் மாணவர்களிடம் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். மேலும், அந்த பொருட்கள் வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் தடய அறிவியல் துறையினரிடம் சோதனைக்காக அனுப்பப்பட்டதை தொடர்ந்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...