அரசின் கொள்கைகளையும் திட்டங்களையும் முறையாக செயல்படுத்துவேன்: கோவை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி பேட்டி

கடந்த 3-ம் தேதி தமிழக காவல் துறை அதிகாரிகள் 46 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, கோவை மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்ற வந்த ரம்யபாரதி சென்னை பொருளாதார குற்றப்பிரிவு துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார்.



தொடர்ந்து, கோவை மாநகரில் தலைமையக காவல் துணை ஆணையராக மூர்த்தி நியமிக்கப்பட்டார். இன்று அவர் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோப்புகளில் கையொப்பமிட்டு பதவியேற்றுக்கொண்டார். காவல்துறை அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். 



தொடர்ந்து, மாவட்ட கண்காணிப்பாளர் மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், 'கோவை மாவட்ட கண்காணிப்பாளராக பொறுப்பேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். கோவை எனக்கு முன்னதாகவே நன்கு தெரிந்த மாவட்டம். அதனால், சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து போன்ற பல்வேறு பிரச்சனைகளிலும் சிறப்பு கவனம் செலுத்தி சிறப்பாக செயல்படுவேன். மேலும், அரசின் கொள்கைகளையும், திட்டங்களையும் முறையாக செயல்படுத்துவேன்' இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...