நீலகிரி மாவட்டம் கொலகொம்பை அருகே உள்ள மானார் தனியார் தேயிலை தோட்டத்தில் வேலை செய்பவர் மல்லிகா (32). இவர் இன்று காலை வீட்டின் வெளியே வாசலை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த யானை ஒன்று மல்லிகாவை தாக்கி, தூக்கி வீசியது. இதில், மல்லிகாவின் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அக்கம்பக்கத்தினர் வந்து மல்லிகாவை மீட்டு குன்னூர் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வனத்துறையினர் குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ள அந்த யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.