தமிழகம் முழுவதும் கட்டுமான தொழிலாளர்கள் வரும் ஜூலை 6-ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற ஜூலை 6 ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அனைத்து கட்டுமான அமைப்புகளின் கூட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.



கோவை மாவட்ட அனைத்து கட்டுமான அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை குழுவினர், இன்று கோவை கேரளா கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட பில்டர்ஸ் ஆசோசியன் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் ராஜவேலு கூறியதாவது:-

அரசு மணல் குவாரிகளில் போதிய அளவு மணல் கிடைப்பதில்லை. மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டுமான பணிகள் முடங்கியுள்ளன. மணல் தட்டுப்பாடு நிலவுவதால் மணல் மற்றும் எம்.சாண்ட் மணல் விலையும் அதிகரித்து உள்ளது. 

கோவை மாவட்டத்தில் கட்டுமான பணிக்கு நாள் ஒன்றுக்கு 1000 லோடு மணல் கிடைக்கப் பெற்ற நிலையில் தற்போது 150 முதல் 200 லோடு மணல் மட்டுமே கிடைப்பதால் கட்டுமான தொழில் மிகவும் பாதிப்படைந்துள்ளது. எம்.சாண்ட் மணல் முழுமையாக கிடைக்க மூன்று, நான்கு மாதங்கள் கடக்கின்றன. குவாரிகளில் எம்.சாண்ட் மணல் கிடைக்க மாநில அரசு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், கட்டுமான பணிகள் முடங்கி இருப்பதால் கட்டுமான தொழிலில் நேரிடையாக ஈடுபட்டுள்ள 4 லட்சம் தொழிலாளர்களுக்கும், மறைமுகமாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வேலை இழந்து பாதிப்படைந்துள்ளனர்.

மணல் தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் தட்டுப்பாட்டை நீக்குதல், பத்திரப்பதிவு கட்டணத்தை குறைத்தல் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி வருகின்ற ஜூலை 6-ஆம் தேதி மாநிலம் முழுவதும் அனைத்து கட்டுமான அமைப்புகளின் சார்பாக ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். 

மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளது. 6ம் தேதி மாலை கோவையில் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து வஉசி மைதானம் வரை பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளோம்.

இவ்வாறு கோவை மாவட்ட பில்டர்ஸ் ஆசோசியன் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் ராஜவேலு தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...