கோவை இரத்தினபுரி பகுதி 7ம் நெம்பர் பாலம் அருகே 1554-ம் எண் கொண்ட டாஸ்மாக் கடையும், புது பாலம் அருகே 1552 எண் கொண்ட இரண்டு மதுபான கடைகள் இயங்கி வரும் நிலையில் சுண்ணாம்பு கால்வாய் அருகில் மேலும் ஒரு டாஸ்மாக் கடை அமைக்க மாவட்ட நிர்வாகத்தால் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் மீனா லோகு தலைமையில் அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறும்போது, இரத்தினபுரி பகுதி கொலை, கொள்ளை மற்றும் சமூக விரோத செயல்கள் நடைபெறும் பகுதியாக உள்ளது. மேலும் இப்பகுதியில் பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு செல்லும் பெண்கள் மதுபான கடையை அச்சத்துடன் தாண்டி செல்லும் நிலையே உள்ளது. தற்போது புதிதாக திறக்கப்படவுள்ள மதுபான கடை முன்னாள் மேயருக்கு சொந்தமானது. ஏற்கனவே அப்பகுதியில் அமைந்துள்ள 2 மதுபான கடைகளை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தி வரும் நிலையில் 3-வதாக மேலும் ஒரு கடை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கக் கூடாது.
இவ்வாறு இரத்தினபுரி மக்கள் தெரிவித்னர்.