கோவை - பொள்ளாச்சி இடையே பயணிகள் ரயில் விரைவில் இயக்கப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிராபகர் பிரபு பேட்டி

கோவை- திருப்பூர் ரயில் நிலையம் மேம்பாட்டுத் திட்டங்களை மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் சுரேஷ்பிரபாகர் பிரவு இன்று காணொளிக் காட்சி மூலம் துவக்கி வைத்தார்.



அப்போது, கோவை ரயில் நிலையத்தில் நடைமேம்பாலம் மற்றும் 1ஏ நடைமேடைக்கு நகரும் படிக்கட்டுகள், மொபைல் செயலி அடிப்படையிலான வாடகை கார் சேவை, கோவை ரயில் நிலையத்தின் முகப்புத் தோற்றம் மேம்படுத்தும் பணிகள், இரண்டு சக்கர வாகனங்களுக்கான பல அடுக்கு நிறுத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் துவக்கி வைத்தார்.



இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபு, பெங்களூர் - கோவை இடையேயான உதய் எக்ஸ்பிரஸ் என்ற இரவு நேர ரயில் செப்டம்பர் மாத இறுதிக்குள் இயக்கப்படும் என தெரிவித்தார். கோவை - பொள்ளாச்சி இடையே பயணிகள் இரயில் விரைவில் இயக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். நாடு முழுவதும் 3 ஆயிரம் ரயில் நிலையங்களில் இலவச வை - பை வசதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இரயில்வே துறையில் 1 லட்சம் கோடி ரூபாய் பாதுகாப்பு அம்சங்களுக்காக செலவிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 



மேலும் தற்போது 41 சதவிகிதமாக உள்ள அதிவேக ரயில்களின் எண்ணிக்கையை 3 ஆண்டுகளில் இரட்டிப்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜி.எஸ்.டியால் நாட்டின் ஒட்டு மொத்த வருமானம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும், இதன்மூலம் அனைத்து துறை உட்கட்டமைப்புகளை மேம்படுத்த வாய்ப்பு உருவாகும் எனவும் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் பேசுகையில், வீரபாண்டி- புதுப்பாலம் இடையே ரயில் நிலையம் மேம்படுத்த வேண்டும். மேலும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் காரமடை கிழக்கு, மத்திபாளையம் பகுதியில் புதிதாக சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். கோவை- பெங்களூருக்கு விரைவு ரயில் தற்போது இயக்கப்படாமல் உள்ளது. அதனை விரைவில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேட்டுப்பாளையம் முதல் பொள்ளாச்சி வரை சிறப்பு ரயில் சேவையினையும் விரைவில் இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இதனைத்தொடர்ந்து, ஊரக வளர்ச்சி சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், கோவையில் போக்குவரத்து நெரிசலை 50 சதவிகிதம் குறைக்கும் வகையில் கோவை ரயில் நிலையத்தினை விரிவாக்கம் செய்ய வேண்டும். இதன் மூலம் கோவையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். கோவை ரயில் நிலையம் வழிகாக செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ், சகாப்தி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் கண்டிப்பாக கோவை ரயில்நிலையத்தில் நின்று செல்லும் வகையில் வழிவகை செய்ய வேண்டும். மேலும், இந்த ரயில்களில் தற்போது சேதமடைந்த பெட்டிகளே பயன்பாட்டில் உள்ளன. அவற்றை மேம்படுத்த வேண்டும். மேலும் புதிய நவீன ரயில் பெட்டிகளையும் இணைக்க வேண்டும். 

பொள்ளாச்சி-பெங்களூருக்கு ஆனைமலை எக்ஸ்பிரஸ் ரயிலினை அறிமுகம் செய்ய வேண்டும். போத்தனூர்- பொள்ளாச்சி ரயில்வேப் பணிகள் தற்போது மந்தமான நிலையில் நடைபெற்று வருகிறது. அதனை விரைந்து முடிக்க வேண்டும். கோவை- மேட்டுப்பாளையத்திற்கு ஞாயிறன்று மட்டும் ரயில் சேவை இயக்கப்படாமல் உள்ளது. அதனை மாற்றி வாரத்தின் அனைத்து நாட்களிலும் ரயில் சேவை வழங்க வேண்டும். மேலும், கோவை ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்வதற்கான அலுவலகத்தினை அதிகரிக்க வேண்டும் என்றார்.



இந்நிகழ்ச்சியில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், அம்மன் கே.அர்ஜூனன், பாராளுமன்ற உறுப்பினர்கள் நாகராஜன், செல்வராஜ், பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

மேலும், துடியலூர் ரயில் நிலையம், பெரியநாயக்கன்பாளையம் ரயில் நிலையங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர் வி.சத்யபாமா, சட்டமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், குணசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...