திரையரங்குகள் முடக்கம்! கோரிக்கைகள் என்ன? திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் சிறப்பு பேட்டி!

நாடுமுழுவதும் ஜிஎஸ்டி வரிக்கொள்கை இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு அமைப்பினரும் இந்த புதிய வரி விதிப்பு கொள்கை குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அதிகமாக வரிகட்ட வேண்டிய சூழல் தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பெரும் இழப்பை சந்திக்கநேரிடும் என்று கூறி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதனால், தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.



கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டம் நேற்று திருப்பூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திரையங்கு உரிமையாளர்களிடம் இருந்து தமிழக அரசு வசூலிக்கும் 30 சதவித வரியை நீக்குவது உள்ளிட்ட மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இது குறித்து மேற்குமண்டல திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியம் சிம்ப்ளிசிட்டி-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- திரையரங்கு உரிமையாளர்கள் ஒவ்வொரு டிக்கெட் விலையில் இருந்தும் தமிழக அரசுக்கு 30 சதவிதத்தை  (எண்டர்- டெயின்மென்ட்) வரியாக கட்டி வருகிறோம். தற்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஜிஎஸ்டி வரிக்கொள்கையின் படி 28 சதவிகித வரியை செலுத்த வேண்டும். இதனால், மொத்தம் 58 சதவிகிதம் வரை வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், திரையரங்கு தொழில் நலிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

அதில், முதலாவது தீர்மானமாக, 58 சதவிகித வரி நீக்க வேண்டும், தமிழக அரசு வசூலிக்கும் 30 சதவித வரியை நீக்க வேண்டும் என தமிக அரசை கேட்டுக்கொள்வதாக முடிவு செய்யப்பட்டது. ஏனென்றால் 58 சதவித வரி செலுத்தி திரையரங்கு தொழில் செய்ய முடியாது. அவ்வாறு, 58 சதவித வரி செலுத்த நேரிட்டால், 150 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டுக்கு 90 ரூபாய் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இப்படி வரி வித்திதால் மக்களும் தியேட்டர்களை புறக்கணிப்பார்கள். சினிமா தொழிலும் பாதிப்புக்குள்ளாகிவிடும். 

இரண்டாவது தீர்மானமாக, டிக்கெட் விலை தற்போது 120 ரூபாய் வசூலிக்கபட்டு வருகிறது. இந்த அதிகபட்ச விலையை 150-ஆக உயர்த்த வேண்டும்.அப்படி உயர்த்தும் பட்சத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் அந்த பணத்தில் இருந்தே ஜிஎஸ்டி வரியை செலுத்துவார்கள். 

கணினிமயமாக்குதல்:

அனைத்து திரையரங்குகளையும் கணினிமையமாக்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம், தியேட்டர்களுக்கு வரும் வாடிக்கையளர்கள் எண்ணிக்கையை தயாரிப்பாளர்கள் உடனடியாக பார்க்க முடியும். இப்படி கணினிமயமாக்குவதன் மூலம் ஜிஎஸ்டி வரியை 100 சதவிதம் நேர்மையாக செலுத்துவார்கள். அப்படி, யாரேனும், வரி ஏய்ப்பு செய்வது தெரிந்தால், அவர்களுக்கு ஒரு முறை எச்சரிக்கை கடிதம் அனுப்பப்படும். மீண்டும் தவறு செய்தால், அடுத்த முறையில் இருந்து அவர்களுக்கு எந்த புதிய திரைப்படங்களும் வழங்கப்படாது. இது திரையரங்க உரிமையாளர்களும், திரைப்பட விநியோகிஸ்தர்களும் சேர்ந்து எடுத்த முடிவு. 

இழப்பு:

தற்போது திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் பாதிக்கபடுவார்கள். இந்த இழப்பை ஈடு செய்ய, வேலை நிறுத்த போராட்டம் முடிந்தவுடன் தற்போது திரையிடப்பட்டிருக்கும் அதே திரைப்படத்தை குறைந்தது 7 நாட்களுக்கு திரையிட வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். 

இதற்கு, தமிழக அரசு வசூலிக்கும் 30 சதவித வரியை நீக்குவதே திரையரங்கு உரிமையாளர்களின் மிக முக்கிய கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...