நீலகிரி மாவட்டம் கொலகொம்பை பகுதியில் வசிக்கும் இராதாகிருஷ்ணன் வயது 65 இவர் பிறவி ஊணம் உடையவர். இவரது வீட்டின் அருகில் உள்ள ரேசன் கடையில் பொருள் வாங்குவதற்கு கடையின் வரிசையில் நின்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தீடிரென காட்டெருமை ஒன்று வந்தது. காட்டெருமை இராதாகிருஷ்ணனின் வயிறு பகுதியில் குத்தியதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே, அருகில் உள்ள குன்னூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு இராதாகிருஷ்ணன் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பின் சிகிச்சை பலனின்றி இராதாகிருஷ்ணன் குன்னூர் அரசு மருத்துவ மனையில் உயிரிழந்தார்.