நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் பகல் நேரங்களிலேயே காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகம் உள்ளதால் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்லவும் யானைகளை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குறிப்பாக, கே.என்.ஆர் பகுதியில் ஒற்றைகொம்பன் யானை ஒரு வார காலமாக முகாமிட்டுள்ளதால் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குன்னூர் சரக வன ஆய்வாளர் பெரியசாமி, வனவர் சவுந்தரராஜன், வனக் காவலர்கள் பாபு, விக்ரம், மணிகண்டன் ஆகியோர் இரவு பகல் பாராமல் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.