ஜி.எஸ்.டி. வரியால் தமிழக தியேட்டர்கள் ஸ்ட்ரைக்?

மத்திய அரசு அறிவித்த ஜிஎஸ்டி வரிக்கொள்கையால் தியேட்டர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழக தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தில் இருந்து 30 சதவிதத்தை வரியாக தமிழக அரசுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வரிவிதிப்பு கொள்கையால், தியேட்டர் உரிமையாளர்கள் கூடுதலாக வரி செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி வரிக்கொள்கையின் படி தியேட்டர் உரிமையாளர்கள் கட்டணத்தில் இருந்து 18 சதவிகிதம் வரியாக செலுத்த வேண்டும். டிக்கெட்டுகளின் விலை 100 ரூபாய்க்கு அதிகமாக இருக்கும்பட்சத்தில் 28 சதவிகிதம் வரியாக செலுத்த வேண்டும். இந்நிலையில், தமிழக வரி உட்பட 58 சதவிகித வரியை தியேட்டர் உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக சினிமா டிக்கெட்டுகளின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தியேட்டரில் படம் பார்க்க செல்வோர் சுமார் 170 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி படம் பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 

இதனால், இன்று நடந்த தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் வரும் 3ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டதாக கூறடுகிறது. இந்த வேலை நிறுத்த போரட்டத்தால் தமிழகத்தில் பல திரையரங்குகளில் திரைபடம் திரையிடப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...