கோவை நொய்யல் ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 28 குளங்கள், 20 தடுப்பணைகள் உள்ளன. ஆறு, குளங்கள், பாசன வாய்க்கால் மூலமாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் நேரிடையாக பாசன வசதி பெறுகிறது.
1.20 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் மறைமுக பாசன வசதி பெறுகிறது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை காலங்களில் ஆற்றில் வெள்ளம் பாயும். அப்போது குளங்களுக்கு நீர் திறக்கப்படுகிறது. நொய்யல் ஆற்றில் இருந்து வெள்ளலூர் குளத்திற்கு பாயும் 8 கி.மீ நீளம் கொண்ட ராஜ வாய்க்கால், குனியமுத்தூர் குளத்திற்கான ராஜ வாய்க்கால், பேரூர் ராஜ வாய்க்கால் போன்றவை பழுதடைந்த நிலையில் இருக்கிறது. இதில் ஆக்கிரமிப்பில் இருந்த நொய்யல் ராஜ வாய்க்கால்களை சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வெள்ளலூர் ராஜ வாய்க்கால் அடைப்பினாலும், ஆக்கிரமிப்பினாலும் போதுமான அளவு நீர் பாயவில்லை. கடந்த 16 ஆண்டுகளில் இந்த குளம் 45 சதவிகிதம் மட்டுமே நிரம்பியது. கடந்த 2009-ம் ஆண்டில் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து குளங்களும் நிரம்பின. ஆனால் வெள்ளலூர் குளத்திற்கு நீர் பாயவில்லை.
இந்த குளத்திற்கு சுண்ணாம்பு கால்வாயிலிருந்து செல்லும் வாய்க்கால் மூலமாக நீர் செல்லவேண்டியிருக்கிறது. ராஜ வாய்க்கால் கரையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமிப்பில் தற்போது உள்ளது.

கேவையில் பல்வேறு குளங்களை சிரமைத்து வரும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினரும் கடந்த மூன்று வாரத்திற்கு மேலாக ராஜவாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகள், மண் திட்டுக்கள், பிளாஸ்டிக் மற்றும் புதர்களை அகற்றி வருகின்றனர். இந்நிலையில், தற்போது பருவமழைக்காலம் துவங்கியுள்ள நிலையில் கோவை மாவட்ட நிர்வாகம் இந்த வாய்க்கால் பகுதியினை சுத்தம் செய்வதில் மெத்தனமாக செயல்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

குறிப்பாக, இந்த வாய்க்கால் கரையோரப் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டு சுமார் 1800-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. அதனை அகற்றி மாற்று இடத்தில் அப்பகுதி மக்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை அடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாற்று இடத்தில் வீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், தற்போது வரை ராஜவாய்க்கால் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வீடுகள் வழங்கப்படவில்லை. கோவை மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு ராஜவாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பினை அகற்றினால் மட்டுமே தற்போதைய பருவமழையில் மழை நீர் சேகரமாகும்.