வெள்ளியங்கிரி தூய்மைப் பணியில் தென்கைலாய பக்தி இயக்கம்

தென்கைலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையைத் தூய்மைப்படுத்தும் பணியில் "தென்கைலாய பக்தி இயக்கம்" பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது.



அதன்படி, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலையில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் திட்டத்தை தொடர்ச்சியாக இவ்வாண்டும் நடைமுறைப்படுத்தி வருகிறது. 

ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் பக்தர்களும் இயற்கை இரசிகர்களும் வெள்ளியங்கிரி மலையில் ஏறுவார்கள். ஒருபுறத்தில் தனிமனிதருக்கு இந்த பயணம் ஒரு மிகப்பெரிய அனுபவத்தை ஏற்படுத்தினாலும் ஏராளாமான மக்கள் இங்கு வந்து செல்வதால் இந்த இடம் பிளாஸ்டிக் குப்பைகளால் மாசுபடுகிறது. இது இங்குள்ள வன உயிர்களுக்கும் மண் வளத்திற்கும் பாதிப்பாக அமைகிறது.



வெள்ளியங்கிரியின் இயற்கை, அழகு மற்றும் புனிதத்தை காத்திடும் பொருட்டு, தென்கைலாய பக்தி இயக்கம், வெள்ளிங்கிரி சுத்திகரிப்பு பணியை தங்கள் செயல் திட்டத்தில் ஒருமுக்கிய அம்சமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.



உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தென்கைலாய பக்தி இயக்கம் சார்பில் வெள்ளிங்கிரி சுத்திகரிப்பு பணி கடந்த நான்கு ஞாயிற்றுக் கிழமைகளில் செயல்படுத்தி வருகிறது. ஜூன் 25 ம் தேதியன்று நடைபெற்ற சுத்திகரிப்பு பணியில் சென்னை, கும்பகோணம், வேளூர், திருச்சி, பொள்ளாச்சி, சிதம்பரம், பெங்களூர், ஹைதெராபாத், சிவகாசி, மதுரை, நாகப்பட்டினம் மற்றும் பல்வேறு ஊர்களிலிருந்து 120-க்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள், கேஜி கல்லூரி மற்றும் எஸ்என்எஸ் ராஜலட்சுமி கல்லூரியின் என்எஸ்எஸ் மாணவர்கள் மற்றும் பேருரை சேர்ந்த சிவபக்தர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று வெள்ளியங்கிரி மலைப்பாதை மற்றும் அடிவார கோவில் சுற்றியுள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் சுத்திகரிப்பு பணி மேற்கொண்டனர்.



அன்றைய தினம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற இந்த சுத்திகரிப்பு பணியில் சுமார் 400 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டது. நான்று ஞாயிற்றுக்கிழமைகள் நடந்த இந்த சுத்திகரிப்பு பணி மூலம் சுமார் 1200 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக இதன் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...