ஈஷா அவுட்ரீச் சார்பில் கோவையில் இலவச கண் சிகிச்சை முகாம்

ஈஷா அவுட்ரீச், சோழா குழுமம் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் (ஜூன் 25) வரும் ஞாயிற்றுக்கிழமை ஈஷா யோகா மையம் அருகில் உள்ள செம்மேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில் கண்களில் புரை உண்டாகுதல், மாறு கண், நீர் அழுத்த நோய், மாலைக்கண், சீழ் மற்றும் நீர்வடிதல், தூரப்பார்வை, கிட்டப்பார்வை போன்ற பிரச்சனைகளுக்கு இலவச பரிசோதனை செய்யப்படும்.

கண்புரை நோயாளிகள் முகாமிலிருந்து கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்படுவார்கள். இவர்களுக்கு I.O.I. லென்ஸ், சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து செலவு அனைத்தும் இலவசமாக வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிட்டப் பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து போன்ற பார்வைக் கோளாறு இருப்பவர்களுக்கு மிக குறைந்த விலையில் தரமான கண்கண்ணாடி வழங்கப்படும்.

முகாமிற்கு வருபவர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டையின் நகல் எடுத்து வரவேண்டும். மேலும் வீட்டு முகவரியை எழுதி எடுத்து வரவேண்டும்.

முகாமில் கலந்து கொள்ளவும் மேலும் விவரங்களுக்கு 09442590021 0422-2651298 எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...