பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி பாரதியார் பல்கலை ஊழியர்கள் ஒரு நாள் விடுப்பு போராட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை பாரதியார் பல்கலைக்கழக ஊழியர்கள் 900-க்கும் மேற்பட்டோர் இன்று ஒரு நாள் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் அலுவலக பணியாளர்களாக 900-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் தினக்கூலி, தொகுப்பூதியம் அடிப்படையிலும் பணிபுரிந்து வருகின்றனர். 

இவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசாணை எண் 65-யை திரும்ப பெற வேண்டும். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர்களை பிற பல்கலைக்கழகங்களில் பணியில் அமர்த்தக் கூடாது என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

அதன் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை (இன்று) 957 பேர் ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்து தங்களது கோரிக்கைகளை அரசுக்கு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பாரதியார் பல்கலைக் கழக ஊழியர்கள் கூறுகையில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். தற்காலிக பணியாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும், இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டத்திலும் ஈடுபட உள்ளோம்" என தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...