கோவை மாவட்டம், மதுக்கரை அருகே உள்ள பாலத்துறை பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (30). அப்பகுதியில் கூலி வேலை செய்துவந்தார். இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு கவுசல்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று இரு பெண் குழந்தைகள் உள்ளது.
இதனிடையே, செல்வத்திற்கும், கவுசல்யாவிற்கும் இடையே கருத்துவேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அவ்வாறு, நேற்று தம்பதியினர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் செல்வம் வீட்டில் இருந்த சாணிப்பவுடரை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று காலை சிகிச்சைக்குப் பின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு கண்விழித்த செல்வம் அரசு மருத்துவமனை பிரசவ வார்டு அருகே உள்ள தண்ணீர் தொட்டியின் மீது ஏறி அங்கிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்கள் அதிகளவில் வந்துசெல்லும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.