கோவை மாவட்டத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்று வேளாண்மை பலகலைக் கழகத்தின், கால நிலை ஆராய்ச்சி மைய துறைத் தலைவர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் சிம்ப்ளிசிட்டி-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-
சாதாரணமாக 8 முதல் 10 கி.மீ. வரை கோவையில் காற்றின் வேகம் இருக்கும். பருவ காலத்திற்கு ஏற்ப இந்த வேகம் அதிகரிக்கும். பொதுவாக ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கும். இந்த கால கட்டத்தில் தான் காற்றாலைகள் மூலம் அதிக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இன்றைக்கு பொருத்தவரை கோவையில் சுமார் 13 கி.மீ. வேகத்தில் காற்று வீசியுள்ளது. நேற்று 9 கி.மீ வேகத்தில் காற்றின் வேகம் இருந்தது. வரும் ஜூலை மாதம் காற்றின் வேகம் இன்னும் அதிகரிக்கும்" இவ்வாறு அவர் கூறினார்.