உதகை அருகே உள்ள கல்லட்டி மலைப் பாதையில் காவல் துறை சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகாம் நடத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டக் காவல் துறை, வனத் துறை மற்றும் நெஸ்ட் அமைப்பினர் இணைந்து இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகாமை கல்லட்டி சோதனைச் சாவடி பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகாம் ஒன்றினை நடத்தினர். இந்த முகாமை உதகை நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன், மாவட்டக் குற்றப்பிரிவுக் காவல் துணைக் கண்காணிப்பாளர் திருமேனி ஆகியோர் தொடக்கிவைத்தனர்.

இந்த முகாமையொட்டி கல்லட்டி மலைப் பாதை முதல் மாவனல்லா பகுதி வரை சாலையோரங்களில் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகள், பாட்டில்கள் போன்றவற்றை அப்புறப்படுத்தினர். இப்பணியில் பெண்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, பாம்பு கடித்தால் வனப்பகுதிகளில் இருந்து உதகை கொண்டுவர சுமார் இரண்டு மணி ஆகும். இதனால் ஏற்படும் உயிர் இழப்புகளை தவிர்க்கும் வகையில் இம்முகாமின் போது, வனத்துறையினருக்கு மருந்துகள் வழங்கப்பட்டது. அந்த ஆயூர்வேத மருந்து உயிர் இழப்பு ஏற்படாமல் இரண்டு மணி நேரம் பாதுகாக்கும் எனபது குறுப்பிடத்தக்கதாகும். இம்மருந்தை காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் வடக்கு வன கோட்ட ரேஞ்சரிடம் வழங்கினார்.

இம்முகாம் குறித்து காவல் துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன் கூறியதாவது: சுற்றுச்சூழலையும், இயற்கையையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அனைவருக்கும் உள்ளது. அதை வலியுறுத்தும் விதமாகவே இத்தகைய முகாம் நடத்தப்பட்டது. இனி, மாதந்தோறும் இத்தகைய முகாம்கள் நடத்தப்படும்" என்றார்.