உணவு தொழில்புரிவோர்கள் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தில் பதிவு செய்வது கட்டாயம்- கோவை மாவட்ட ஆட்சியர்

உணவு தொழில்புரிவோர்கள் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் படி தங்கள் பகுதி உணவு பாதுகாப்பு அலுவலரிடமோ, அல்லது  மாவட்ட நியமண அலுவலரிடமோ, அனைவரும் உரிமம் அல்லது பதிவு செய்து கொள்வது கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

அனைவருக்கும் தரமான மற்றும் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதிப்படுத்த 05.08.2011 முதல் நகரம், கிராமம் என்ற பாகுபாடு இல்லாமல் இந்தியா முழுவதும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 அமலில் உள்ளது உணவு வியாபாரிகளுக்கு 05.08.2011 முதல் பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்காக போதிய கால அவகாசம் வழங்கப்பட்டுவிட்டது. ஆகையால் தற்சமயம் உணவு வியாபாரிகள் அவர்களது விற்று கொள்முதல் தொகைக்கேற்ப உரிமம் அல்லது பதிவு பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதன்படி உரிமம் அல்லது பதிவு பெற வேண்டிய உணவு உற்பத்தியாளர்கள் மொத்த விற்பனையாளர்கள் விநியோகஸ்தர்கள், சில்லறை விற்பனையாளர்க்கான உணவு எண்ணெய், பேக்கரி, இனிப்பு, பனை வெல்லம், குளிர்பானங்கள் மற்றும் ஜஸ்கிரீம்,  பலகாரங்கள், மிட்டாய், முறுக்கு, சிப்ஸ், சோடா கம்பெனிகள், பலசரக்கு கடைகள், அரிசி ஆலைகள், மசால் அரவை நிலையங்கள், உணவு சேமிப்பு கிடங்குகள், மறு பொட்டலமிடுபவர்கள், பால் மற்றும் பதப்படுத்தும் நிறுவனங்கள், பால் குளிரூட்டும் நிலையங்கள், பால் கூட்டுறவு கொள்முதல் மற்றும் விற்பனை நிலையங்கள், பால் வியாபாரிகள், உணவுப் போக்குவரத்துக்கு வாகனங்கள் ஆகியவற்றை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

தனியார் மற்றும் அரசு விடுதிகள், தெருக்களில் கூவி உணவு பொருள்கள் விற்பனை செய்யும் நடை மற்றும் சைக்கிள் வியாபாரிகள், கரும்பு சாறு பிழிபவர், காய்கறி, பழங்கள் விற்பவர்கள், பெட்டிக்கடைகள், உணவு விடுதிகள், திருமண மண்டபங்கள், விசேஷ நிகழ்வுகளுக்கு சமையல் சேவை செய்பவர்கள், குடிநீர் வாகனங்கள், உணவு விடுதிகள், தேநீர் கடைகள்,  கல்லூரி மற்றும் பள்ளி கேன்டீன்கள், விடுதிகள் உப்பு விற்பனையாளர்கள், கோழி, மீன் மற்றும் ஆட்டு இறைச்சி கடைகள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள், நியாய விலை கடைகள், அன்னதானம் வழங்கும் கோவில்கள் தேவாலயங்கள் பள்ளி வாசல்கள் என இலவசமாகவோ அல்லது பாதி விலையிலோ பொது மக்களுக்கு வழங்கும் வியாபாரிகளும் இத்துடன் உணவுப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் உட்பட அனைவரும் தங்களை மற்றும் தங்கள் நிறுவனம் மற்றும் வாகன (லாரி, வேன் போன்ற) விபரங்களை தங்கள் பகுதி உணவுப் பாதுகாப்பு அலுவலரிடமோ அல்லது மாவட்ட நியமன அலுவலரிடமோ பதிவு அல்லது உரிமம் பெற தொடர்பு கொள்ளலாம்.

அபராதம் மற்றும் தண்டணை இன்றி உடனடியாக பதிவு அல்லது உரிமம் பெற வேண்டியது ஒவ்வொரு உணவு வியாபாரியின் கடமை மற்றும் கட்டாயமாகும்.

வருடத்திற்கு பன்னிரண்டு லட்சத்திற்குட்பட்டு விற்று முதல் செய்பவர்கள் (வருடத்திற்கு ரூபாய் நூறு மட்டும் செலுத்தி சீட்டு  (சலான்) மூலம் கருவூலம் தொடர்புடைய வங்கியில் செலுத்தலாம். www.foodlicencing.fssai.gov.in என்ற இணையதள முகவரியில் தங்களது புகைப்படம், அடையாள அட்டை (அதாவது குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவற்றில் ஏதாவது ஒன்று) மற்றும் உறுதிமொழி படிவம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து உணவுப் பாதுகாப்பு அலுவலரிடம் நேரிலோ அல்லது தபாலிலோ சமர்ப்பிக்க வேண்டும்.

கோவை மாவட்டத்தில் இதுவரையிலும் 204 கலப்பட உணவு பொருட்கள் அதாவது பாதுகாப்பற்ற தரக்குறைவான மற்றும் தப்புகுறியிடு உள்ள உணவுப் பொருட்களை விற்பனை செய்த வியாபாரிகள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தண்டனையும் அபராதத்தொகையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ரூபாய் 16,60,500 அபராதத் தொகையாக விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் நுகர்வோர்களுக்கு உணவு விற்பனையாளர்களும் மாணவ மாணவிகளும் தங்களது உணவு பொருட்கள் தொடர்பான புகார்களை வாட்ஸ் அப் எண் 94440 42322 வாயிலாக தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவிக்கப்படும் புகார்களுக்கு உடனடியாக உணவுப் பாதுகாப்பு துறையின் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு குறைகள் சரி செய்யப்படுகின்றது" என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...