கோவை மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் மாவட்ட சமூக நலத்துறை மூலம் இன்று குடும்பங்களிலும், சமூகத்திலும் மூத்த குடிமக்கள் உதாசினப்படுத்துவதையும், அவமதிக்கப்படுவதையும் தடுப்பதற்கான முதியோர்களுக்கெதிரான வன்கொடுமை தடுப்பதற்கான உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இதில், அனைத்து அரசு அலுவலர்களும் பங்கேற்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பேசுகையில், 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களின் ஜனத்தொகையானது தற்போது வேகமாக வளர்ந்துவருகிறது. மேம்படுத்தப்பட்ட மருத்துவ சேவை, நல்ல ஊட்டச்சத்தான உணவு ஆகியவற்றால் தனிப்பட்ட மனிதனின் வாழ்நாள் நீட்டிக்கப்பட்டுவருவதால், 2050ல் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களின் ஜனத்தொகை 14 சதவீதம் உயரும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
மக்கள் தொகையில் தற்போது வேகமாக அதிகரித்து வரும் முதியோர்களின் எண்ணிக்கை நம்மை மகிழ்ச்சியடைய செய்தாலும் வயது நிமித்தமாக ஏற்படும் தள்ளாமை மற்றும் இயலாமையை சோர்வின்றி உரியவகையில் சமாளிக்க வேண்டிய கட்டாயமமும் நமக்கு உள்ளது. முதியோர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்;காகவும், அவர்கள் பாதுகாப்பான, கௌரவம் மிக்க வாழ்க்கையினை வாழ்வதற்காகவும், தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அவர்களது நலனுக்காக செயல்படுத்தி வருகிறது. முதியோர் நலன் தொடர்பான மத்திய அரசின் வழிகாட்டுதல்கள், சட்டங்களின் அடிப்படையில் மற்றும் தமிழக அரசின் முதியோர் நல கொள்கைகளின் அடிப்படையின் படி, பல்வேறு திட்டங்களையும் ஆதரவற்ற முதியோரைப் பராமரிக்க முதியோர் இல்லங்கள் நடத்துதல், அரசு தற்பொழுது சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
முதியோர் மனோரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர். வளர்ந்து வரும் மக்கள் தொகை உடைந்து போன கூட்டுக் குடும்பம், பொருளாதார பற்றாக்குறை மற்றும் மேல் நாட்டு கலாச்சாரத்தின் சீரழிவு போன்றவை முதியவர்களின் மீதான அக்கறையை குறைக்கின்றது. ஆகவே நாம் முதியவர்களின் தேவையை உணர்ந்து அவர்களுக்கு சமுதாயத்தில் முக்கியத்தும் அளித்திட இந்த முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு நாளில் நாம் ஒவ்வொருவரும் கீழ்க்கண்ட செயல்காளால் முதியோருக்கு உதவிட சூளுரை ஏற்போம்.
முதியோர்களிடம் கோபத்தையும், தகாதவார்த்தைகளால் பேசுவதையும் தவிர்ப்போம். முதியோர்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்தால் தட்டிகேட்போம். முதியோர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு செவிகொடுப்போம். முதியோர்களை மனோரீதியாகவும், உடல்ரீதியாகவும் காயப்படுத்துவதை தவிர்ப்போம். முதுமைகாலத்தில் முதியோர்களின் நலனில் அக்கறைகாட்டுவோம். முதியோர்களுக்கு பேருந்து, மருத்துவமனை, வங்கிமற்றும் அனைத்து இடங்களிலும் முன்னுரிமைஅளிப்போம். முதியோர்களிடம் பேசுவதற்குநேரம் ஒதுக்குவோம். முதியோர்களின் உணர்வுகளுக்குமதிப்பளிப்போம். முதியோர்கள் கட்டணமில்லா 1253 என்றஉதவிஎண் தொலைபேசி சென்னையிலும், 1800-800-1253 என்ற தொலைபேசி ஏனைய தமிழகத்திலும் சட்டம் மற்றும் மருத்துவ உதவிஃமுதியோர் இல்லங்களில் சேர்க்கைஃமுதியோர் பாதுகாப்பு சட்டம் 2007 பற்றிய தகவல்கள் பெற உதவலாம் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், மாவட்ட காவல் துணை ஆணையர் லட்சுமி, மாவட்ட சமூக நல அலுவலர் ஷெரின்பிலிப், மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரைத்தாள்) சிதம்பரம் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.