காவல்துறையினரிடம் இருந்து பாதுகாப்பு வழங்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கணவன், மனைவி புகார்

புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பட்டான், இவரது மனைவி கமலா. இவர்களுக்கு தங்கராஜ், செந்தில்குமார் என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், தங்கராஜ்-க்கும் ஜோதி என்ற பெண்ணுக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதனிடையே, தங்கராஜ்-க்கும், அவருடன் பணியாற்றி வந்த கோகிலா என்ற பெண்ணுக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் மாயமாகிய நிலையில், தங்கராஜை தேடிவரும் அன்னூர் போலீசார் பட்டானையும், அவரது குடும்பத்தினரையும் கண்மூடித்தனமாக தாக்குவதாக குற்றம்சாட்டி இன்று கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. 



இது குறித்து பட்டான் கூறியதாவது:- எனது மகன் மாயமானது முதல் தினமும் நள்ளிரவில் போலீசார் எங்கள் வீட்டிற்கு வருகின்றனர். வீட்டில் இருக்கும் என்னையும், எனது இளைய மகன் செந்தில்குமாரையும் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையம் அழைத்துச் சென்று கண்மூடித்தனமாக தாக்கி வருகின்றனர்.

போலீசார் தாக்கியதில் எனது இடது கண்ணில் குறைபாடு ஏற்பட்டுவிட்டது. மேலும், கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் எனது இளைய மகனை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசார் இதுவரை விடுவிக்கவில்லை. தங்கராஜ் இருக்கும் இடத்தை கேட்டு அடித்து கொடுமைப் படுத்திவருகின்றனர். தங்கராஜ் இருக்கும் இடம் எங்களுக்கு தெரியாது என்று கூறினாலும், அதனை போலீசார் நம்பாமல், எனது அண்ணன் மகன் உட்பட அனைவரையும் விசாரணை என்ற பெயரில் கூட்டிச்சென்று அடித்து துன்புறுத்தி வருகின்றனர்.



இந்த பிரச்சனையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளோம்".  இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...