கருணாநிதியின் 94 வயதையும், எம்.ஜி.ராமச்சந்திரனின் 100 வயதையும் குறிக்கும் வகையில் தங்க நகைத்தொழிலாளியின் கலைப்படைப்பு

கருணாநிதியின் 94 வயதையும், எம்.ஜி.ராமச்சந்திரனின் 100 வயதையும் குறிக்கும் வகையில் தங்க நகைத்தொழிலாளி சோப்பு, மெழுகு, பென்சிலில் வடித்த சிற்பங்கள் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.

கோவை தங்க நகை தொழிலாளியான உன்னால் முடியும் ராஜா மைக்ரோ அளவில் தங்கத்தில் கிரிக்கெட் பேட் மற்றும் உலக கோப்பை, தலைவர்களின் சிறிய சிற்பங்களாக செய்வது, சுற்றுச்சூழல் சம்பந்தமான விழிப்புணர்வுகளை கலையின் மூலம் வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் கருணாநிதி அவர்களின் வைரவிழா நிகழ்வு அண்மையில் சென்னையில் நடத்தப்பட்டது. கருணாநிதியின் தமிழ் தன்னை பிரமிக்க வைப்பதால் அவரது உருவத்தை பென்சிலில் நாற்காலியின் மேல் கருணாநிதி அமர்ந்து கைகாட்டிக் கொண்டிருப்பது போன்றும் அவரது தலைமேல் பேனாமுனை வைத்து அதில் 94 வயது என்று குறிப்பிட்டு அவரது கலையுணர்வை பிரதிபலிக்கும் வண்ணம் சிறிய சிற்பமாக உருவாக்கி இருந்தார்.

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது கருணையுள்ளத்தையும், மக்களுக்கு ஆற்றிய சேவையயை நினைவு கூறும் வகையில் குளிக்க பயன்படுத்தும் சோப்பில் எம்.ஜி.ஆரின் உருவத்தை வண்ணம் கொடுத்து வரைந்திருந்தார். வெளிச்சத்தில் காண்பித்தால் எம்.ஜி.ஆரின் கண்ணாடி பிரதிபலிப்பது நன்றாக தெரியும் வண்ணம் வரைந்திருந்தார். மேலும் எம்.ஜி.ஆர் உருவத்தை மெழுகுச்சிலையில் உருவாக்கி எம்.ஜி.ஆர் 100 என்று எழுத்தில் ஐந்நூறு கிராம் எடையில் உருவாக்கியிருந்தார். பென்சிலில் 400 மில்லி தங்க வர்ணம் பூசப்பட்ட எம்.ஜி.ஆர் உருவத்தை பேன்சில் முனையில் சிறிய அளவில் உருவாக்கி இருந்தார்.

தங்க நகைத்தொழிலாளியாக இருந்தாலும், தனது கலைபடைப்பின் மூலம் பல்வேறு சிற்பங்களையும் ஓவியங்களையும் வரைந்து பொதுமக்களிடம் பாராட்டுகளை பெற்று வருகிறார் யு.எம்.டி ராஜா.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...