பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று கால்நடை மருத்துவர்கள் கவனஈர்ப்பு போராட்டம்

கால்நடை மருத்துவர்களுக்கான ஒரே பதவி மற்றும் ஊதியம் என்ற நிலையை மாற்றும் அரசாணையை உடனடியாக அமல்படுத்தக் கோரி கால்நடை மருத்துவர்கள் இன்று ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

கால்நடை பராமரிப்புத் துறையில் பணியாற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் 25 முதல் 28 ஆண்டுகள் வரை பதவி உயர்வு அற்ற நிலையில் ஒரே பதவியில் பணிபுரியும் நிலையினை மாற்றி அரசு ஆணை 49 ஐ அமுல்படுத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 2,768 மருத்துவர்கள் இன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் 105 கால்நடை மருத்துவமனையில் உள்ள 85 மருத்துவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

பணி உயர்வு குறித்து தமிழக அரசு விரிவாக ஆலோசித்து இந்தாண்டு பிப்ரவரி மாதம் பதவி உயர்வு பணி இடம் மாறுதல் செய்த ஆணைகளை வழங்கிய நிலையில் கடந்த மே மாதம் வெளியிட்ட அரசு ஆணை   திடீரென காரணம் சொல்லமால் நிறுத்தி வைக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிறுத்தப்பட்ட அரசு ஆணையினை  உடனடியாக திரும்ப பெற்று பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையினை முன் வைத்து இன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். 

அரசு ஆணை திரும்ப பெறவில்லை என்றால் மாநில குழு கூடி அடுத்த கட்ட போரட்டங்கள் குறித்து முடிவெடுக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். மருத்துவர்கள் போரட்டத்தில் ஈடுபட்டத்தால் கால்நடை பரமரிப்பில் பாதிக்காத வகையில் சில மருத்துவர்கள் மற்றும் கால்நடை ஆய்வாளர்களை கொண்டு முதலுதவி மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...