பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மீதான வன்கொடுமைக்கு தீர்வு வழங்க கோரி பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் பணிபுரியும் மகாதேவன், பரமசிவம் மற்றும் வேலாயுதம் ஆகியோரின் மீது நடத்தப்படும் வன்கொடுமை மற்றும் பணியாளர்கள் மீதான அராஜகம் குறித்து கடந்த 21.5.2017ம் தேதி அன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகார் கொடுத்த பணியாளர்களை வாபஸ் வாங்க மிரட்டினர் அது குறித்தும் 28.5.2017ம் தேதி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் எங்கள் சங்கத்தின் தலைவர் ராமன் மீது சஸ்பென்ட் குறித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. புகார் குறித்து எவ்வித நடவடிக்கையும் இல்லாத காரணத்தினால் நேற்று பேரூராட்சி உதவி இயக்குனரிடம் புகார் தெரிவித்து மகாதேவன், பரமசிவம் மற்றும் வேலாயுதம் ஆகியோரின் மீது நடத்தப்படும் வன்கொடுமை நடவடிக்கையிலிருந்து விடுவிக்குமாறும், பொய் குற்றச்சாட்டை சுமத்தியுள்ள ராமன் மீது உள்ள சஸ்பென்ட் உத்திரவை திரும்பபெற வலியுறுத்தியும் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.