மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய தடை விதித்த மத்திய அரசை கண்டித்து, கோவை கொங்கு மண்டல மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.


மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய தடை விதித்த மத்திய அரசை கண்டித்து, கோவை ஆத்துப்பாலம் பகுதியில் கொங்கு மண்டல மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய தடை விதித்த மத்திய அரசை கண்டித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை ஆத்துப்பாலம் பகுதியில் கொங்கு மண்டல மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், சமத்துவ கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்டனர். 

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், மாடுகளை இறைச்சிக்காக விற்பனை தடைசட்டத்தினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டார். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாடுகளை வாங்கி வந்த தமிழக கால்நடை அதிகாரிகள் பசு பாதுகாவலர்களால் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழக அரசு ஒரு கண்டன அறிக்கை கூட விடமால் மெளனம் காப்பதாகவும், மத்திய அரசிடம் அடிமையாக தமிழக அரசு மாறி விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மாடுகளை விற்பனை செய்ய விதித்த தடையை நீக்கவில்லை எனில், அனைத்து தரப்பு மக்களும் போராட்டங்களில் ஈடுபடுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...