மாநகராட்சிக்கு சொந்தமான 1.27 ஏக்கர் ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்பு -மாநகராட்சி ஆணையர் தகவல்


கோயம்புத்தூர் மாநகராட்சியில் 4 மண்டலங்களிலுள்ள மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.9.16 கோடி மதிப்பிலான 1.27 ஏக்கர்;அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் இன்று தகவல் தெரிவித்தார்.



இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில்; “கோயம்புத்தூர் மாநகராட்சியிலுள்ள பகுதிகளில் மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடங்களை உதவி நகரமைப்பு அலுவலர்கள் மூலம் இடங்களை கண்டறிந்து விரைவில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுவரை மாநகராட்சியிலுள்ள 5 மண்டலங்களிலிருந்து கடந்த 2016 நவம்பர் மாதம் மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.64.70 கோடி மதிப்பிலான 5.34 ஏக்கர் அளவிலான இடங்களுமரூபவ்; டிசம்பர் மாதம் சுமார் ரூ.55.45 கோடி மதிப்பிலான 3.77 ஏக்கர் அளவிலான இடங்களும் மற்றும் 2017 ஜனவரி மாதம் சுமார் ரூ.26.2 கோடி மதிப்பிலான 2.72 ஏக்கர் அளவிலான இடங்களும் பிப்ரவரி மாதம் சுமார் ரூ.71.95 கோடி மதிப்பிலான 7.66 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களும் மார்ச் மாதம் சுமார் ரூ.50.38 கோடி மதிப்பிலான 6 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களும் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டும் மீட்கப்பட்ட இடங்களில் பூங்கா அமைத்தல் தோட்டங்கள் அமைத்தல் மரம் செடிகள் நடுதல் போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.



அதனை தொடர்ந்து இன்று மாநகராட்சியிலுள்ள 4 மண்டலங்களான மேற்கு மண்டலம் கிழக்கு வடக்கு மற்றும் தெற்கு மண்டலம் ஆகிய பகுதிகளில் மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.9.16 கோடி மதிப்பிலான 1.27 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சியின் மேற்கு மண்டலம் வடவள்ளி வார்டு-16 மருதம் நகர் பூங்கா இடம் பகுதியில் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.1.50 கோடி மதிப்பிலான 15.02 சென்ட் அளவிலான இடங்களும் வடவள்ளி வார்டு-16 மாசாணியம்மன் வீதி குழந்தைகள் விளையாட்டுப் பூங்கா பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.1.64 கோடி மதிப்பிலான 16.36 சென்ட் அளவிலான இடங்களும் கிழக்கு மண்டலம் காளப்பட்டி வார்டு-34 வி.வி.சி நகரில் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.1.44 கோடி மதிப்பிலான 18 சென்ட் அளவிலான இடங்களும்காளப்பட்டி வார்டு-34 இளங்கோ நகர் ஹவுசிங் யூனிட் சாலையோர பகுதியில் பொது ஒதுக்கீடு இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட கடைகளும் வடக்கு மண்டலம் வெள்ளக்கிணறு வார்டு-43 பொன்விழா நகரில் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார்.3.15 கோடி மதிப்பிலான 63 சென்ட் அளவிலான இடங்களும் மற்றும் தெற்கு மண்டலம் குறிச்சி வார்டு-95 உதயம் நகர் பூங்கா பகுதியில் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.1.43 கோடி மதிப்பிலான 14.3 சென்ட் அளவிலான இடங்களும் ஆகமொத்தம் மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.9.16 கோடி மதிப்பிலான 1.27 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்ட்டுள்ளது.

மேலும் இதுபோன்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.” இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...